☰
×

பிரபல இன்ஸ்டா பிரபலம் திடீர் தற்கொலை..!

 

சென்னையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்த ஹரிஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிஷ் பற்றி அவதூறாக பேசியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது தந்தை விநாயகம் புகார் தெரிவித்துள்ளார். இன்ஸ்டா பிரபலத்தில் இந்த விபரீத முடிவு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஹரிஷின் தந்தை கானாத்தூர் காவல் நிலையத்தில் நேரடியாக ஜேசன் சாமுவேல் மீது தற்கொலைத் தூண்டல் புகாரைப் பதிவு செய்துள்ளார்.

ஹரிஷ் தற்கொலை செய்து கொள்வதற்குச் சில தினங்களுக்கு முன்பு, யூடியூபர் ஜேசன் சாமுவேல் தனது பக்கத்தில் ஹரிஷைக் குறிவைத்து ஒரு மிகக் கடுமையான விமர்சன வீடியோவை வெளியிட்டிருந்தார்.அதில், ஹரிஷ் முறையான செபி (SEBI) அங்கீகாரம் இல்லாதவர் என்றும், போலியான உரிமத்தைக் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடுகிறார் என்றும் மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

ஜேசன் சாமுவேல் அந்த வீடியோவை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, ஹரிஷின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லட்சக்கணக்கான நெகட்டிவ் கமெண்ட்டுகளும், ட்ரோல்களும் (Trolls) குவியத் தொடங்கின.ஜேசன் வீடியோவை ஆதாரமாகக் காட்டிச் சிலர் ஹரிஷை "மோசடிப் பேர்வழி" என மிகக் கேவலமாக வசைபாடினர்.​

"என் மகன் மீது ஜேசன் சாமுவேல் திட்டமிட்டுப் பரப்பிய அவதூறு வீடியோவும், அதனால் சமூக வலைதளங்களில் என் மகனுக்குக் கொடுக்கப்பட்ட கடுமையான சைபர் புல்லிங் சித்திரவதையும்தான் அவனை இந்தத் தற்கொலை முடிவுக்குத் தூண்டியது.என் மகனின் மரணத்திற்கு ஜேசன் சாமுவேலின் வீடியோதான் நேரடிக் காரணம்" என அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.​