×

ஆட்சியை பிடிக்கப்போவது யார்? வெளியான கருத்துக்கணிப்பு

 

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது என்பதை  இன்சைட் எலெக்ஷன் (INSIDE ELECTION) கருத்துக் கணிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. பொதுவாகவே எந்த மாநிலங்களிலும் தேர்தல் நடந்தாலும், இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக சில சர்வேக்கள் எடுக்கப்பட்டு, அது சம்பந்தமான முடிவுகளும் வெளியாகி அரசியல் களத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.