×

“ஏர்போர்ட்டுக்குள்ளேயே அனுமதிக்காதீங்க..”- பயணிகளை அலைகலைக்கும் இண்டிகோ!

 

இன்று காலை 8 மணிக்கு பிறகு ஒரு இண்டிகோ பயணிகூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை மூன்றாம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து  நாள் ஒன்றுக்கு  புறப்பட வேண்டிய உள்நாடு, புறப்பாடு சேவை 145. இதில் காலை 8 மணி வரை 20 வருகை 10 புறப்பாடு விமானசேவை ரத்தாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, வெளிநாடு புறப்பாடு 7 சேவையில் தோகா, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய மூன்று விமானங்கள்   மட்டும் புறப்பட்டு சென்றுள்ளன, இதனால் இரண்டு நாட்களாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுண்டர்கள் முன்பாக பயணிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விமான நிலையம் உள்ளே அமர கூட இடம் இல்லா நிலையில் குழந்தைகள், பெரியவர்கள் என தரையில் அமர்ந்து கிடைத்த உணவு பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டனர். இதனால் பெரும் பாதிப்பு அடைந்ததால் விமான சேவைகளை பெரும் அளவில் ரத்து செய்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாக, மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு ஒரு கடிதம் அனுப்ப பட்டுள்ளது , காலை 8 மணிக்கு பின்னர் ஒரு இண்டிகோ பயணி கூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


ஒரு விமானி நாள் ஒன்றுக்கு 6 விமான சேவை அளித்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து துறை பயணிகள் பாதுகாப்பை முன்னிறுத்தி ஒரு விமானி, இரண்டு விமான சேவைக்கு மட்டுமே விமானத்தை  இயக்க வேண்டும் எனவும் அதுபோல் விமான ஊழியர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விமானிகள், ஊழியர்கள் பற்றாகுறை ஏற்பட்டதாகவும் அதனால் தான் பெரும் அளவு இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி தவித்த நிலையில், இண்டிகோ நிறுவனம் பொது மன்னிப்பு கேட்டுள்ளது. டிசம்பர் 5 முதல் 15 வரையிலான பயணித்திற்கான அனைத்து ரத்து செய்தல் மற்றும் மறு அட்டவணை கோரிக்கைகளுக்கும் முழுமையான விலக்கு அளித்துள்ளது. அதாவது மேற்கண்ட நாட்களில் புக்கான டிக்கெட்களுக்கு Refund வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அது ஒரே நாளில் முடியாது என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.