இண்டிகோ விமானங்கள் இன்று நள்ளிரவு 12 மணி வரை இயங்காது என அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை இண்டிகோ விமானங்கள் இயங்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் மத்திய வரசின் FDTL விதிகளால் (Flight Duty Time Limitations - விமானிகள் ஓய்வு & கடமை நேர விதிகள்) பெரும் நெருக்கடியில் உள்ளது. விதிகளின்படி, ஒரு விமானி நாள் ஒன்றுக்கு 6 விமான சேவை அளித்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து துறை பயணிகள் பாதுகாப்பை முன்னிறுத்தி ஒரு விமானி, இரண்டு விமான சேவைக்கு மட்டுமே விமானத்தை இயக்க வேண்டும் எனவும் அதுபோல் விமான ஊழியர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விமானிகள், ஊழியர்கள் பற்றாகுறை ஏற்பட்டதாகவும் அதனால் தான் பெரும் அளவு இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்கள் நள்ளிரவு 12 மணி வரை இயங்காது என அறிவித்துள்ளது. இண்டிகோ விமானம் தொடர்பாக 044-22565113, 22565112 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.