கபடியில் தங்கம் வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்..!!
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. இன்று (செப் 26) ஆடவர் மாரத்தான் இறுதிப்போட்டியில் சாவன் பர்வால் 2வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தார். மாரத்தான் போட்டியில் 44 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பதக்கம் வென்றுள்ளது.கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மகளிருக்கான கபடிப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. ஈரான் மகளிர் அணியை 34-31 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது.
இந்தியா இதுவரை 27 பதக்கங்களை வென்றுள்ளது.தங்கம்-3வெள்ளி-11வெண்கலம்-13
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ''ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழகத்தின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழக அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்