×

கின்னஸ் சாதனை படைத்த இந்திய திரைப்படம்..! ஒரே படத்துக்கு 92 விருதுகள்..!

 

2000 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் கஹோ நா பியார் ஹை என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அமீஷா படேல் ஆகியோர் இணைந்து நடித்தனர்.

காதல் ட்ராமா ஜேனரில் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கினார்.திறமையான பாடகரான ஹிருத்திக் ரோஷன் ரோகித் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சோனியா என்ற பணக்காரரின் மகள் கேரக்டரில் அமீஷா படேல் நடித்தார்.

இருவருக்கும் இடையே காதல் ஏற்படும் போது ஹிருத்திக் ரோஷன் ஒரு விபத்தில் உயிரிழந்து விடுகிறார். அதைத் தொடர்ந்து மனதளவில் அமீஷா படேலுக்கு பாதிப்பு ஏற்பட வெளிநாடு செல்லும் அவர் அங்கு ஹிருத்திக் ரோஷனைப் போன்று காட்சியளிக்கும் ஒருவரைக் காதலிக்கிறார்.அவர் யார்? ஹிருத்திக் ரோஷனின் மரணத்திற்கு என்ன காரணம் என்ற விபரங்கள் சுவாரசியமாக படத்தில் காட்சி அமைக்கப்பட்டன.

10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 78 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்தது.இந்தப் படத்துக்கு ஃபிலிம் ஃபேர், ஜி சினிமா விருது, பாலிவுட் திரைப்பட விருது என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 92 விருதுகள் வழங்கப்பட்டன.இந்த திரைப்படம் 2002 ஆம் ஆண்டு அதிக விருதுகளைப் பெற்ற திரைப்படம் என்கிற கின்னஸ் சாதனையைப் படைத்தது.