×

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 10,302  பேர் பாதிப்பு!

 

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று இன்று வரை ஓய்ந்த பாடில்லை.  கொரோனா முதல், இரண்டாம் அலையால் பலரும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன் லட்சக்கணக்கான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இன்னும் கொரோனா இரண்டாம் அலை ஓயாத நிலையில், மூன்றாம் அலை ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகிறது. 

இன்னும் கூட பல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு இன்னும் விலக்கி கொள்ளப்படாமல், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி தொற்று மற்றும் பலி எண்ணிக்கையானது ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10,302  ஆக பதிவாகியுள்ளது.  அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் 11,787  பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர்.  அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, கடந்த 24 மணிநேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 267 ஆக உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை  1,24,868 ஆக உள்ளது.