☰
×

ஸ்டாலினை சந்திக்க காத்திருக்கும் இண்டியா கூட்டணித் தலைவர்கள்!

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க 2 தனி விமானங்களில் இண்டியா கூட்டணி தலைவர்கள் சென்னை வந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க 2 தனி விமானங்களில் இண்டியா கூட்டணி தலைவர்கள் சென்னை வந்தனர். சோனியா, ராகுல், கார்கே, மம்தா, எம்.ஏ.பேபி உள்ளிட்டோர் சென்னை வருகை தந்துள்ளனர். அவர்கள் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்டாலினிடம் கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தன்னை சந்திக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சென்னை வருகை தந்த நிலையில், தனது தாயாரை சந்திக்க வீட்டில் இருந்து புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மூன்று மாநில முதல்வர்கள் ஆகியோர் தற்போது ஹோட்டலில் காத்திருக்கின்றனர்.