மு.க.ஸ்டாலின் உடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.கனிமொழி ஆகியோர் வருகை புரிந்தனர். அவர்கள் வந்த சிறிது நேரத்திலேயே இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களும் வந்தனர். இல்லத்திற்கு வந்த சோனியா காந்தி, காரக்கே, ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை வாசலிலேயே வந்து வரவேற்றார் ஸ்டாலின். வீட்டின் வாசலில் இன்று அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது வீட்டிற்கு வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கட்டி அணைத்து வரவேற்றார். இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் தொகுதி மறுவரையறைக்கான ஆதரவு நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமாறு ஸ்டாலினிடம் வலியுறுத்தவுள்ளனர். கர்நாடகா, கேரளா, தெலங்கானா முதல்வர்களும் ஸ்டாலினை சந்திக்க வருகை புரிந்துள்ளனர்.
திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நாளை தாக்கல் ஆகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான தனது ஆதரவு நிலைபாட்டை திமுக மாற்றினால் 22 எம்பிக்களின் ஆதரவை பாஜக பெறுவது கடினம்.