×

“சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பு” : மருத்துவமனையின் திடீர் அறிக்கை!

சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இருப்பினும் முன்னதாகவே அவர் உடல்நலக்குறைவால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விடுதலைக்குப் பிறகும் சசிகலா அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த 19 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில்
 

சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா, கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இருப்பினும் முன்னதாகவே அவர் உடல்நலக்குறைவால் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விடுதலைக்குப் பிறகும் சசிகலா அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 19 ஆம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்து தகவல்களை மருத்துவமனை தொடர்ந்து தங்கள் அறிக்கையில் தெரிவித்து வருகிறது.

இந்த சூழலில் சசிகலாவுக்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 272 ஆக இருப்பதால் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது என்றும் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் மருத்துவமனை தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சசிகலா உடல்நிலை சரியான பின்பு அவர் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகத்திற்கு வருகை புரிவார் என்று அவரது அண்ணன் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்திருந்தார். சென்னைக்கு வரும் சசிகலா, ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்பு அவரது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்குவார் என்றும் கூறப்படுகின்றது.