×

அரசு பணி தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம்; அரசுப் பணியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் முழு நிதி நிலை அறிக்கையை கடந்த 13ஆம் தேதி தாக்கல் செய்தது . இதைத்தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண் துறைக்கான தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 16ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இடையிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
 
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்படும். அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும். அத்துடன் அரசுத் துறைகளில் 100% தமிழ்நாடு இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கட்சி வேறுபாடில்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 1,704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன; அதில் 1,167 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டன, 637 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மு.க.ஸ்டாலின் 110 விதியின்கீழ் நகை கடன் தள்ளுபடி, அண்ணா நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி 700 ஆயுள் கைதிகள் விடுதலை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.