×

5000 கன அடியாக அதிகரிப்பு – செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கும் நீரின் அளவு

நிவர் புயல் அதன் பாதிப்பைக் காட்டத் தொடங்கி விட்டது. சமீபத்தில் வந்தத தகவலின் படி நிவர் புயர் புதுச்சேரி அருகே இன்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை மையத்தினர் கணித்துள்ளனர். அதனால், புயல் வீசி முடிந்தாலும் அடுத்த ஆறு மணிநேர்த்து மழை பெய்வது குறையாது என்று கூறபட்டிருக்கிறது. சென்னையில் நேற்று முதலே கனத்த மழை பெய்துவருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி அதன் கொள்ளளவை நெருங்கியதால், இன்று
 

நிவர் புயல் அதன் பாதிப்பைக் காட்டத் தொடங்கி விட்டது. சமீபத்தில் வந்தத தகவலின் படி நிவர் புயர் புதுச்சேரி அருகே இன்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை மையத்தினர் கணித்துள்ளனர். அதனால், புயல் வீசி முடிந்தாலும் அடுத்த ஆறு மணிநேர்த்து மழை பெய்வது குறையாது என்று கூறபட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று முதலே கனத்த மழை பெய்துவருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி அதன் கொள்ளளவை நெருங்கியதால், இன்று மதியம் 12 மணிக்கு அது 1000 கன அடி நீர் வெளியேற்றப்படும் எனத் தகவல் வெளியானது. ஆனால், மதியத்திற்கு பிறகு அடையாற்றின் செல்லும் நீரை வைத்து பார்க்கையில் அதிகளவு நீர் திறந்து விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மக்களுக்கு தோன்றியது.  

PC: FAcebook

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், திறந்துவிடப்படும் நீரின் அளவை அதிகரித்துள்ளனர். அதாவது 1000 கன அடியிலிருந்து 5000 ஆயிரம் கன அடியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி ஏற்கெனவே கூறப்பட்டிருந்தாலும், இது எந்த இடம் வரை இதன் பாதிப்பு இருக்கும் என கணிக்க முடியவில்லை.

எந்நேரமு வெள்ள அபாயம் இருப்பதால் கரையோர மக்களின் நிலை கேள்விக்குறியதாக இருக்கிறது.