×

அரசு சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில்  ஐடி ரெய்டு 

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள POCL நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரணம் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. டெல்லியிலிருந்து வந்த வருமான வரித்துறையினர் சென்னை அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடந்தேறி வருகிறது.  

கடந்த 26 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனை ஈட்டு வருகின்றனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில்,  கரூர் மாவட்டத்தில் அரசு ஒப்பந்ததாரரான சிஎம் சங்கர் ஆனந்த் என்பவரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 இந்த சூழலில் சிறை  ஏ1 சைக்கிள் உரிமையாளர்  சுந்தர பரிபூரணம் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை கூடுதல் விலைக்கு சுந்தர பரிபூரணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது,