×

ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் வரி ஏய்ப்பு காரணமாக தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த வாரம் மதுரை ஹெரிடேஜ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத வகையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஏவிஎம் எர்த் மூவர்ஸ்
 

ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் வரி ஏய்ப்பு காரணமாக தொடர்ந்து பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த வாரம் மதுரை ஹெரிடேஜ் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத வகையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பல கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வேறு கணக்குகளுக்கு மாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் சென்னையில் திநகர், நங்கநல்லூர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஜேசிபி வாகனங்களை வாடகை விடும் ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வருமான வரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.