உண்மையிலேயே பழநிக்கு மொட்டை போட்டவர் யார் என்று காலப்போக்கில் தெரியும்! - அமைச்சர் செங்கோட்டையன்..!
அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி;
டெண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது என்றால் அதற்கான காரணங்கள் இல்லாமல் செய்து விட முடியாது. அதற்கு காரணங்கள் இருக்க வேண்டும். கூடுதல் மதிப்பீடுகள் தயாரித்து இருக்க வேண்டும். முதல்வரே நேரிடையாக பார்க்கும் துறை. ஆகவே தெளிவான முடிவுகளை மேற்கொள்வார்.பணம் கொடுத்து தான் பஸ்களை ஓட்ட வேண்டும் என்ற நிலை மாறி, ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை என்கிற போது, அரசு என்ன கட்டணத்தை நிர்ணயிக்கிறதோ அந்த கட்டணத்தை கொண்டு ஆம்னி பஸ்களை இயக்குவது என்று உரிமையாளர்கள் சொல்வது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.
போதை பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக கேரளாவுடன் இணைந்து தமிழகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பழநிக்கு மொட்டை போட்டவர் யார் என்று காலப்போக்கில் தெரியும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியின் போது கூறினார்.