இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வாய் திறப்பார்களா..? தவெக ஐடி விங் கேள்வி..!
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் பெண்ணை ஏமாற்றிப் பணம் பறித்ததாகவும், மிரட்டியதாகவும் எழுந்த புகாரைச் சுட்டிக்காட்டி த.வெ.க விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இப்போது வாய் திறப்பார்களா எனத.வெ.க கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே,
எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார்.
தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?.
கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?.
தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?.
பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) November 19, 2026