கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முக்கிய அப்டேட்..!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து முக்கிய அப்டேட் :
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதை அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் புதிய பயனாளிகள் சேர்ப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். மேலும் மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2000 எந்த மாதம் முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் அந்த நேரத்திலும் வெளியாகும்.
அதேநேரத்தில், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் தற்போது செயல்படுத்தப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முழுமையாக நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல் பெண்களுக்கான குல விளக்குத் திட்டம் செயல்படுத்தப்படும். அத்திட்டத்திலும் மாதம் ரூ.2000 வழங்கப்படும். இதில் ஏதாவது புதிய விதிகள் சேர்க்கப்படுமா என்பது தெரியவரும். திமுக ஆட்சிக்கு வந்தால் நடைமுறையில் எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் அதிமுக புதிதாக ஆட்சிக்கு வந்தால், உடனடியாக குல விளக்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். இந்த முடிவை அறிந்து கொள்ள தமிழ்நாட்டு பெண்கள் மே 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.