×

முக்கிய அப்டேட்..! நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகாது - தேர்தல் கமிஷன் அறிவிப்பு..!

 

தமிழகத்தில், கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டது. இறந்த, இடம்பெயர்ந்த, இரட்டை பதிவுள்ளோர் பெயர் நீக்கப்பட்டு, டிச., 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க, ஜனவரி 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.


அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முகவரி மாற்றம் செய்ய, ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, அடையாள அட்டை மாற்றம் செய்யவும் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல், வரும் 17ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது பிப்ரவரி 17ம் தேதியில் இருந்து பிப்ரவரி 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

இது குறித்து அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் முரண்பாடுகள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது. முரண்பாடுகள் உள்ள வாக்காளர்கள் தற்போது ஆவணங்களை சமர்ப்பித்து வருகின்றனர். வாக்காளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து வருவதால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஒரு வாரம் தள்ளிப்போகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 23ம் தேதி வெளியாகும். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.