☰
×

தீபாவளி உணவு வணிகர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை முக்கிய அறிவுறுத்தல்கள்

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு வணிகர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தரம் மற்றும் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது. 

உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்:


இனிப்பு, காரம், கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பைையாளர்கள் மற்றும் தின்பண்ட சீட்டு நடத்துபவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயம்.

தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். 

சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உணவு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித் தொற்று இல்லாத சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் நெய் விவரங்களைத் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

கொதிநிலையில் உள்ள எண்ணெய்யுடன் புதிய எண்ணெய்யைக் கலக்கக் கூடாது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. RUCO திட்டத்தின் மூலம் பயோ டீசலாக மாற்றலாம்.

கலப்படப் பொருட்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தக் கூடாது.

உணவு எண்ணெய்களைப் பலமுறை பயன்படுத்தக் கூடாது. தரமற்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்து அழிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் தேதி, காலாவதி தேதி மற்றும் சைவம் / அசைவம் குறியீடு ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

உணவுப் பொருட்களின் தரம் மற்றும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க:

வாட்ஸ்அப்:

9444042322

இணையதளம்:

foodsafety.tn.gov.in

செயலி:

TN உணவு பாதுகாப்பு நுகர்வோர் ஆப்