`தேர்தல் கட்டுப்பாடுகள் அமல்'' - தலைமை தேர்தல் அதிகாரி
Oct 4, 2026, 19:11 IST
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அனல்பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்தது.
தேர்தல் ஆணையத்தின் விதிகள்
- அரசியல் கட்சியினர் வீதிவீதியாக சென்று வாக்காளர்களிடம் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு.
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்காளர் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும்.
- திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகளில் வெளியாட்கள் இருக்கிறார்களா என சோதனை நடத்தப்படும்.
- மாலை 6 மணி முதல் தேர்தல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை.
- தேர்தல் விவகாரங்களை சமூக ஊடகம், டிவி, ரேடியோவில் வெளியிட தடை.
- தொகுதிக்கு வெளியிலிருந்து வந்த கட்சி நிர்வாகிகள் வெளியேற வேண்டும்.
- தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்கள் தொகுதியில் இருக்க கூடாது.
- வாக்காளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல வேட்பாளர்களுக்கு தடை விதிப்பு.
- விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் (அ) இரண்டும் விதிக்கப்படும்.
- மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நிறைவடையும் வரை விதிமுறைகள் அமல்.