அந்த வீடியோவில் இருப்பது நான் தான்... அமைச்சர் கீர்த்தனா இல்ல... மலேசியப் பெண் விளக்கம்..!
சமூகவலைதள பக்கங்களில், கருப்பு உடை அணிந்து, பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும், 'வீடியோ' வேகமாக பரவி வருகிறது. இந்தப் பெண், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா என, சிலர் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.
இதனை மறுத்த கீர்த்தனா, 'சமூக வலைதள பக்கத்தில் வேகமாக பரவும் வீடியோவில் இருப்பது நான் இல்லை; அப்படியே, அது நானாக இருந்தாலும், அதிலென்ன தவறு இருக்கிறது' என, கேள்வி எழுப்பி இருந்தார்.இந்நிலையில், அந்த வீடியோவில் இருந்த பெண் ஒருவர் இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.
அந்த வீடியோவில் அவர், தான் மலேஷியாவை சேர்ந்தவர் எனவும், வினோஷா எனவும் தெரிவித்து உள்ளார்.கண்கலங்கியபடி ,அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: என் பெயர் வினோஷா. நான் ஏன் இந்த வீடியோ செய்கிறேன் என்று முதலில் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். அனைவருக்கும் தெரிந்திருக்கும். சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகத்தில் பரவும் விஷயம் எனக்கு மன அழுத்தத்தை அளித்துள்ளது.
சமூக ஊடகத்தில் என்ன வீடியோ வைரலாக செல்கிறது என அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இது எனது விளக்க வீடியோ மட்டும் தான். இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளேன்.அந்த வீடியோவால் இரண்டு நாளில் நடக்கும் விஷயங்கள் மிகவும் மன அழுத்தத்தை கொடுக்கிறது.அந்த வீடியோவில் என்ன தவறாக இருக்கிறது எனத் தெரியவில்லை. காரில் இருந்து இறங்கி வேலைக்கு செல்வதை ஒருவர் எடுத்து, அமைச்சரவை தொடர்புபடுத்தி அந்த வீடியோவை பதிவிட்டு உள்ளனர்.அவர்கள் போட்ட காரணம் என்பது ' அமைச்சர் இந்த மாதிரி டிரஸ் போடலாமா 'என்பது.முதலில் அந்த வீடியோவில் இருப்பது நான்.அந்த வீடியோவில் எனக்கு ஆதரவு அளித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
அந்த வீடியோ கீழே கமெண்ட் செய்தவர்களுக்கும் மோசமான கமெண்ட் கொடுத்தவர்களுக்கும், அந்த வீடியோவில் புகைப்படத்தை எடுத்து டிரோல் செய்தனர். நிறைய வீடியோக்கள் பார்த்தேன். இது என்னை பாதிக்காது. எனது உறவினர்கள், குடும்பத்தினர் எனக்கு ஆதரவு கொடுத்தனர். அதில் உனது தவறு கிடையாது . தவறு செய்யவில்லைஎனத் தெரிவித்தனர்.
அந்த வீடியோவில் நான் முறையாக ஆடை அணியவில்லை எனத் தெரிவித்தனர். நான் அப்படி என்ன டீசன்ட் ஆக ஆடை அணியவில்லை என்பது தெரியவில்லை. நான் வேலைக்குச் செல்கிறேன் . அதற்கு ஏற்றபடி வேலைக்குச் செல்கிறேன். அந்த வீடியோவில் என்னை அர்த்தம் செய்யவில்லை. இதனால் என்னை விமர்சிப்பதை நிறுத்துங்கள். அவரையும் விமர்சிப்பதை நிறுத்துங்கள். அமைச்சரும் அந்த ஆடையை அணியவில்லை. வீடியோவில் இருப்பது அவர் கிடையாது.நான்.இனிமேல் போலீசில் புகார் அளித்து வீடியோவை அகற்ற சொல்வதில் பலன் இல்லை என நினைக்கிறேன்.
போலீசில் புகார் அளித்துவிட்டேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. மலேஷியன் போலீசில் புகார் அளித்துள்ளேன். நான் மலேஷியாவை சேர்ந்தவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் கீர்த்தனா குறித்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த மலேசியப் பெண் #ministerkeerthana #tvkkerrthana #keerhanatvk #trendingvideo #viralvídeo #tvkminister #arrowroots pic.twitter.com/haiVJtXOwH
— Arrowroots Media (@arrowrootsmedia) August 24, 2026