"நான் போட்டியிடவில்லை!" - தேர்தல் களத்தில் இருந்து திடீரென ஒதுங்கும் சரத்குமார்: பின்னணி என்ன?
அரசியல் பிரமுகரும், நடிகருமான சரத்குமார் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
எஸ்.ஆர்.சேகர் மற்றும் மாநில பொறுப்பாளரை சந்தித்து இந்த தேர்தலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் எனவும், வாக்குறுதிகள் எப்படி இருக்க வேண்டும் எனவும், 22 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் என் எண்ணத்தை பிரதிபலித்து வந்துள்ளதாகவும் என்னுடன் இயக்கத்திற்கு வந்தவர்கெல்லாம் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கொண்டு தேர்தல் நெருங்குவதால் அவர்களுக்கு அதற்குண்டான என்ன பொறுப்புகள் வழங்க வேண்டும் என்பதையும் உடனடியாக அறிவித்தால் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும், என்னுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும், வாய்ப்பு வழங்கினால் அவர்களுக்கு உழைப்பதற்காக காத்திருக்கிறேன் எனவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சி அமைந்தால் 10000 ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், தேர்தல் அறிக்கையாக எடப்பாடி பழனிச்சாமி கருணைத்தொகையாக ஒரு குடும்பத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த பணம் சென்றடையும் மக்களுக்கு நல்லது தான் என குறிப்பிட்டார்,
தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடிக்கு மேல் கடலில் தத்தளிப்பதாகவும் இந்த கடனை அடைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபடும் என்றும், கடன் வாங்காமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்றும் வாங்கக்கூடிய கடனில் தொழில் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படும் என குறிப்பிட்டார், வரி வாங்காமல் அரசாங்கம் செயல்பட முடியாது என குறிப்பிட்டார். அரசர் காலத்திலிருந்து வரியை வாங்கி தான் ஆட்சி நடத்துவதையும் குறிப்பிட்டார், வருமான வரி உள்ளிட்ட வரிகளை மக்களிடம் வசூலிக்காவிட்டால் அரசாங்கம் நடத்த முடியாது எனவும், வலியுறுத்தியதாகவும், மக்களுக்கு வரி சுமை பாதிக்காத வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.