"தங்கம் வென்றா ரூ. 5 கோடி!" – 'ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036' திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்!
தமிழகத்தை சேர்ந்த வீர, வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்லும் வகையில் 'ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036' என்ற புதிய திட்டத்தை CM விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளி பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கல பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'டிரீம் ஒலிம்பிக்ஸ் 2036' (Dream Olympics 2036) என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உலகளாவிய ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பான புதிய திட்டமாகும்.
இத்திட்டத்தை சென்னையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கான பாராட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். மேலும் இந்த புதிய திட்டத்தின் கீழ் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ட்ரீம்ஒலிம்பிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்.ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றால் ரூ.3 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள, பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், பாரா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைவரும் 'ட்ரீம் ஒலிம்பிக்ஸ்' திட்டத்தில் சேர்க்கப்பட்டு, மாதம் ரூ.1 லட்சம் உதவித்தொகை உட்பட ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி இனி பயிற்சியாளர்களுக்கும் 50% ஊக்கத்தொகை வழங்கப்படும்அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.