×

இதை பார்த்தால் இனி லிஃப்டில் ஏறவே பயப்படுவீர்கள்! குஜராத்தில் நடந்த பகீர் சம்பவம்..!

 

குஜராத் மாநிலம் வல்சாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிர்பாராத விதமாக மிக வேகமாக மேலே சென்றதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லிஃப்டில் இருந்த நபர் வெளியேற முயன்ற நொடியில், அது கட்டுப்பாட்டை இழந்து ராக்கெட் வேகத்தில் மேல் தளத்தை நோக்கிப் பாய்ந்தது. நல்வாய்ப்பாக அந்த நபர் ஒரு நொடி இடைவெளியில் வெளியே குதித்ததால், நூலிழையில் உயிர் தப்பினார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லிஃப்ட் தரைத்தளத்தில் நிற்காமல் திடீரென வேகம் எடுத்ததும், அந்த நபர் பதற்றத்துடன் வெளியேறும் காட்சிகளும் காண்போரை உறைய வைக்கின்றன. இந்த விபத்து குறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், லிஃப்ட் பராமரிப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.