"மாதம் 5 ஆயிரம் போட்டா... கையில் ரூ. 3.5 லட்சத்திற்கு மேல் அள்ளலாம்!" – போஸ்ட் ஆபிஸின் சூப்பர் RD திட்டம்!
போஸ்ட் ஆபிஸின் மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்று தொடர் வைப்பு நிதி (RD) திட்டமாகும். இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 5,000 வீதம் சேமித்து வந்தால், முதிர்வு காலத்தில் மொத்தமாக எவ்வளவு தொகை கிடைக்கும்? என்பது குறித்து இப்போது தெரிந்துகொள்ளலாம்.
நம் நாட்டிலுள்ள வங்கிகளைப் போலவே, அஞ்சல் துறையும் தனது வாடிக்கையாளர்களுக்காக RD திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். தற்போது, போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.7% ஆகும். இத்திட்டத்தின் கால அளவு 60 மாதங்கள், அதாவது 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் 'லாக்-இன்' காலம் (முதலீட்டைத் திரும்பப் பெற முடியாத அல்லது மாற்ற முடியாத கால அளவு) உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ. 100-ஐ வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். இதில் அதிகபட்ச வைப்புத்தொகை வரம்பு எதுவுமில்லை. நீங்கள் விரும்பும் அளவுக்குத் தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம்.
மாதந்தோறும் ரூ. 5,000 சேமித்து வந்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். போஸ்ட் ஆபிஸின் RD திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் ரூ. 5,000-ஐ சேமித்து வந்தால், 5 ஆண்டுகளின் முடிவில் முதிர்வுத் தொகையாக மொத்தம் சுமார் ரூ. 3,56,830 கிடைக்கும்.
இதில், மொத்த முதலீட்டுத் தொகை 3,00,000 ரூபாயாக இருக்கும். உங்களுக்குக் கிடைக்கும் வட்டித் தொகை சுமார் 56,830 ரூபாயாக இருக்கும். அதாவது, 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயாக நீங்கள் சேமித்து வந்தால், நிச்சயமாக நல்ல தொகையை நீங்கள் பெற முடியும்.