பெண்களை அவமதித்தால் எதிர்க்கட்சித் தலைவரானாலும் கைது தான்! அப்போ சோஷியல் மீடியாவுக்கு..? ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை!
தி.மு.க.,விற்கு பாடம் எடுத்தவர் முதல்வர் விஜய். பெண்களை கடவுளாக பேசுவதை விட சமத்துவமாக பேச வேண்டும். பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். தி.மு.க.,வினர் தனிப்பட்ட தாக்குதல்களை செய்கின்றனர். த.வெ.க எம்.எல்.ஏ.,க்களிடம் செந்தில் பாலாஜி பேரம் பேசுகிறார். 70 வருட பாரம்பரிய கட்சியின் தலைவர் கொளத்தூரில் தோல்வியை தழுவினார். கடந்த தேர்தலில் சேப்பாக்கம் ஐஸ்ட் மிஸ் ஆகிவிட்டது. தி.மு.க.,வின் தோல்விக்கு பண்ணையார்தனம் தான் காரணம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்
காலமும் நேரமும் 24 மணி நேரத்தில் எப்படி உதயநிதியின் ஆணவத்தை அடக்கியிருக்கிறது பார்த்தீர்களா? அவரை சிறைக்கு அனுப்புவது நமது நோக்கமல்ல. முதல்வர் விஜயின் நோக்கத்தை உயர்நீதிமன்றத்திலேயே அரசு வழக்கறிஞர் தெரிவித்துவிட்டார்.
இது என்ன மெஜெஜ் தெரியுமா ? பெண்கள் குறித்து அவதூறாக பேசினால் எதிர்க்கட்சித் தலைவரையே கைது செய்கிறோம். இனி இந்த சோஷியல் மீடியாவில் இருப்பவர்கள், போலி டிவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள், மஞ்ச பத்திரிகை நடத்துபவர்கள். யார் இப்படி பேசினாலும் கைது, கைதுதான் என்பதுதான்.