×

 "பேச விடலைன்னா நிக்க தான் செய்வாங்க"-  ஆவேசமாக பேசிய எடப்பாடி பழனிசாமி..!

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் 6 தொகுதிகளின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என காரசார விவாதம் சட்டப்பேரவையில் அடுத்தடுத்து மைக் அணைக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் எடப்பாடி ஆவேசம்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக 6 MLA-க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால், ராஜினாமா செய்யப்பட்ட தொகுதியில் பிரச்னைகள் சரிசெய்யவில்லை என திமுக, அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்த நிலையில், தொடர்ந்து காரசார வாதம் தொடங்கியது. அப்போது, குதிரை பேரம் குறித்து இபிஎஸ் கூறிய நிலையில், ‘வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து பேசக்கூடாது’ என சபாநாயகர் கூறினார். தொடர்ந்து, அதிமுகவினர் கடும் வாதத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்தது குறித்து சட்டமன்றத்தில் விவாதம் எழுந்தது. தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதுகுறித்து பேசத்தொடங்கினார். அப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது, எனவே பேச அனுமதி இல்லை என சபாநாயகர் கூறினார். இதனால் அதிமுகவினர் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களை சபாநாயகர் அமரச்சொன்னார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த இபிஎஸ் "பேச விடலைன்னா நிக்க தான் செய்வாங்க" என சபாநாயகரை நோக்கி ஆவேசமாக கத்தியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

#WATCH | “பேச வாய்ப்பு கொடுக்கலனா நிக்கதான் செய்வாங்க.. என்னங்க இது அநியாயம்?”

அவைத் தலைவர் பேச்சுக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசும்போதெல்லாம் மைக்கை அணைத்ததால் அதிமுகவினர் எழுந்து முழக்கமிட்டனர்.#SunNews | #TNAssembly |… pic.twitter.com/JBg5M3u3gT

— Sun News (@sunnewstamil) August 25, 2026