×

ஸ்மார்ட்போன் வாங்கினால் 1 கிராம் தங்க நாணயம்! ‘தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்!

 

‘தி சென்னை மொபைல்ஸ்’ நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தனது கிளைகளில் ஒரு சிறப்புத் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி, ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புப் பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ‘தி சென்னை மொபைல்ஸ்’ கடைகளில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் சொந்தமாக ஒரு கவிதை எழுதி சமர்ப்பிக்க வேண்டும்அவற்றில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, தேர்வான வாடிக்கையாளர்களுக்கு பரிசாக 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் பேருக்கு தங்க நாணயம் வழங்கும் இந்த திட்டத்தின் முதல் கட்ட நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சம்சு அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக 1 கிராம் தங்க நாணயங்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய நிறுவனர் சம்சு அலி, ஆடி மாத சிறப்பு சலுகைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஸ்மார்ட்போன்களை சிறந்த விலையில் வழங்குவதுடன், அவர்களின் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தங்க நாணய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், முதல் கட்டமாக கோவையில் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய மெகா நகரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.