×

இந்த தகவல் உண்மையென்றால் தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு ?முதல்வர் விஜயை விளாசிய டிடிவி தினகரன்..!! 

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பதாவது:

வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி  மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. 

முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத திரு ஜோசப் விஜய் அவர்கள் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார் ? புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்பு தான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மையென்றால், தமிழகத்தில் குதிரை பேர அரசு எதற்கு ?

வயது, பாலினம், மனிதாபிமானம் என எதையுமே பொருட்படுத்தாமல் 10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்- சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய்…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 29, 2026