போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள்!
Aug 11, 2026, 20:39 IST
போலீசார் லஞ்சம் கேட்டால் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் மக்கள் புகாரளிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் போலீசார் லஞ்சம் கேட்டால் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் மக்கள் புகாரளிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்க, சென்னை காவல்துறை சார்பில் ‘ஊடல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்போர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். காவல்துறையினர் தங்கள் பணிகளை செய்ய மக்கள் லஞ்சம் தரக் கூடாது என சென்னை காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. தொழிலதிபரை மிரட்டி பணம் ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் கைதான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.