×

“ரஜினி பாஜகவுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம்” – எல்.முருகன்

தொகுதிகள் கேட்டு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ரஜினி கடந்த 90காலகட்டத்திலிருந்து அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து கடந்த மாதம் தான் அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், உடல்நிலை காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல; பாஜகவினரும்
 

தொகுதிகள் கேட்டு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

ரஜினி கடந்த 90காலகட்டத்திலிருந்து அரசியலுக்கு வருவதாக கூறி வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து கடந்த மாதம் தான் அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில், உடல்நிலை காரணமாக தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல; பாஜகவினரும் சோகத்தில் மூழ்கினர்.

இந்நிலையில் மதுரையில் பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்த போது, “தொகுதிகள் கேட்டு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை; ரஜினி அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். அவர் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் வரவேற்போம்; அஞ்சல் துறை தேர்வில் தமிழை மத்திய அரசு கட்டாயம் சேர்க்கும் ” என்றார்.

தான் அரசியலுக்கு வராவிட்டாலும் கூட, தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என்ற தொனியில் ரஜினி கூறியுள்ளார். அதனால் ரஜினியின் ஆதரவை வைத்தாவது வாக்கு வங்கியை நிரப்பி கொள்ள வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.