×

அனைவரும் சமம் என்றால், விஐபி தரிசனம் ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்யக் கோரி, விஸ்வ இந்து பரிஷத் வடதமிழ்நாடு பிரிவு தலைவர் சொக்கலிங்கம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது, விஐபி தரிசனம் ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவே கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பணம் கொடுத்தால் கடவுளை கட்டியணைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

விஜபி தரிசனத்திற்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்கக்கூடாது என்றும் வினவினர். இதுகுறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.