☰
×

தண்டனை கிடைத்தால் பதவி பறிப்பு, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை — இக்கட்டில் எம்எல்ஏ அருள் விக்னேஷ்!

 

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியருக்கு ஆபாசமான மற்றும் முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், பொது நிகழ்ச்சிகளின்போது தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆபாச குறுச்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டுக்கு இன்று (நவம்பர் 25) சென்ற இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி சம்மனை நேரில் வழங்கினார்.

ஐகோர்ட் நியமித்த திருப்பூர் மாவட்ட எஸ்பி ஸ்ருஷ்டிசிங் விசாரணை நடத்த உள்ளார். எம்எல்ஏ தண்டிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம். அப்படி தண்டிக்கப்பட்டால் அவரது பதவி பறி போய்விடும்.

ஆறு ஆண்டுக்கு தேர்தலில் நிற்கவும் முடியாது. இத்தகைய சிக்கலை ஏற்படுத்திய அருள் விக்னேஷை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைப்பதற்கு கட்சி தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.