தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முழுமையான மதுவிலக்கு கொண்டு வரப்படும் - வேலூர் இப்ராஹிம்..!
கொள்கை இல்லாதவர்களால் கட்சியில் நீடிக்க முடியாது. அவர் வெளியேறியதால் பாஜகவிற்கு எந்த இழப்பும் இல்லை. கல்யாண் சிங், உமாபாரதி போன்ற பெரும் தலைவர்களே கட்சியை விட்டு சென்று பின் திரும்பியுள்ளனர். அண்ணாமலை சித்தாந்த அடிப்படையில் பேசியது உண்மையாக இருந்தால் தெளிவு பெற்று திரும்புவார், சில்லறைகளுக்காக சென்றிருந்தால் வரமாட்டார்" என்றார்.
மேலும் தற்போதைய தவெக அரசைச் சாடிய அவர், "தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்தை விஜய் நிறைவேற்றவில்லை. மதுக்கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 வசூலிப்பதைத் தடுக்கவில்லை. பள்ளிகளில் இந்து மத அடையாளங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலில், புர்காவிற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முழுமையான மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.