"ஒரு யானைக்காக ஒரு மாநிலமே அழுகிறது என்றால்... அவன் வெறும் மிருகம் அல்ல... தெய்வம்!"
கேரள மாநிலத்தின் கோவில் திருவிழாக்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் கம்பீரத் தோற்றத்தாலும் சாதுவான குணத்தாலும் பக்தர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்திருந்த 'பள்ளாட்டு பிரம்மதத்தன்' (Pallattu Brahmadathan) என்ற 54 வயது கம்பீரக் கொம்பன் யானை மின்னல் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தது.
பாலா அருகே மேலம்பாராவில் உள்ள பள்ளாட்டு வீட்டின் வளாகத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் மின்னல் தாக்கி இந்த யானை உயிரிழந்தது. திங்கள்கிழமை வனத்துறை அதிகாரிகள் உடற்கூறாய்வு (Postmortem) செய்து முடித்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்குப் பிறகு பிரம்மதத்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கேரளா திருவிழா ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவரான ராஜேஷ் பள்ளாட்டு, அவரது சகோதரர் சதீஷ் மற்றும் அவர்களின் தாயார் கமலம்மா ஆகியோர் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்த யானையின் உடலுக்கு அருகே நின்று கண்ணீர் விட்டு அழுத காட்சி பார்ப்போரை நெகிழ வைத்தது.
"அவன் வெறும் யானை அல்ல; கடவுள் எங்களுக்குக் கொடுத்த பரிசு! ஒருமுறை கோவில் திருவிழாவில் 8 யானைகள் மிரண்டு ஓடியபோதும், இவன் மட்டும் அமைதியாக நின்றான். எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்திருந்தால் கூட நாங்கள் இந்த அளவுக்கு உடைந்திருக்க மாட்டோம்" எனச் சதீஷ் கண்ணீருடன் தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டு புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில் பரமேக்காவு பகவதியின் திருவுருவச் சிலையைச் (திடம்பு) சுமந்து சென்ற பெருமை பிரம்மதத்தனுக்கு உண்டு. வைக்கம் அஷ்டமி உள்ளிட்ட முக்கியத் திருவிழாக்களில் தவறாமல் பங்கேற்று லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தது.
அருணாச்சலப் பிரதேசக் காடுகளில் இருந்து பிடிக்கப்பட்ட இந்த யானை, 1999-ல் கேரளாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் 'புதுப்பள்ளி பிரம்மதத்தன்' என அழைக்கப்பட்ட இந்த யானை, பின்னர் ராஜேஷின் பராமரிப்பிற்கு வந்த பிறகு 'பள்ளாட்டு பிரம்மதத்தன்' என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டது. தன் முதன்மைப் பாகன் தாமோதரன் நாயர் இறந்தபோது, மனிதர்களைப் போல நேரில் சென்று அஞ்சலி செலுத்தி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய அன்பு நிறைந்த யானை பிரம்மதத்தன்.
கால்நடைப் பிரச்சனையான 'நீரிலக்கம்' சிகிச்சை பெற்று வந்த வேளையில், எதிர்பாராதவிதமாகத் தாக்கிய மின்னலால் இந்த யானையின் உயிர் பிரிந்தது கோவில் திருவிழா ரசிகர்களிடையேயும் கேரளா முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Keralam bids farewell to Pallattu Brahmadathan, the beloved 54-year-old temple elephant who died after being struck by lightning. Thousands gathered to pay their final respects to Brahmadathan, a familiar presence at major temple festivals, including Thrissur Pooram. https://t.co/oSNun8ndd7
— Organiser Weekly (@eOrganiser) October 6, 2026
#WATCH | Keralam bids farewell to Pallattu Brahmadathan, the beloved 54-year-old temple elephant who died after being struck by lightning. Thousands gathered to pay their final respects to Brahmadathan, a familiar presence at major temple festivals, including Thrissur Pooram. https://t.co/oSNun8ndd7
— Organiser Weekly (@eOrganiser) October 6, 2026