2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு..!
தென் ஆப்பிரிக்காவில் 2027ல் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகியவை 'பி' பிரிவில் உள்ளன. மொத்தம் 14 அணிகள், 12 மைதானங்களில் 57 போட்டிகள் நடைபெறும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அணிக் குழுக்கள் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது.
முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 17 இல் கேப்டவுனிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 18 இல் தஸ்வானேவிலும் நடைபெறுகிறது. இறுதி போட்டி நவம்பர் 21 -ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
𝙈𝘼𝙍𝙆 𝙔𝙊𝙐𝙍 𝘾𝘼𝙇𝙀𝙉𝘿𝘼𝙍𝙎 🗓️
— ICC (@ICC) October 1, 2026
The ICC Men’s #CWC27 fixtures have been unveiled 🏆
Access the ticket ballot 🎫 https://t.co/MSLEQzcObb pic.twitter.com/dpTE4TEjO7
இத்தொடரில் மொத்தம் 14 அணிகள் இடம்பெறுகின்றன. இவை குரூப் ஏ, குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு களம் காண்கின்றன. இவற்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 10-ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறும் லீக் போட்டியில் பலபரீட்சை நடத்த உள்ளன.
முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 17 இல் கேப்டவுனிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் 18 இல் தஸ்வானேவிலும் நடைபெறுகிறது. இறுதி போட்டி நவம்பர் 21 -ம் தேதி ஜோகனஸ்பர்க்கில் நடைபெறுகிறது.
அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மொத்தமாக 57 போட்டிகள் கொண்ட தொடராக உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் அக்டோபர் 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. இதன்பின் அக்டோபர் 10ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளும், அக்டோபர் 17ஆம் தேதி இந்தியாவை எதிர்த்து குரூப் சுற்றுக்கு தகுதி பெறும் அணியும், அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா - ஜிம்பாப்வே அணிகளும் விளையாடுகின்றன. அக்டோபர் 10ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஆட்டம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards