×

"கூகுள் மருத்துவர்களாக யாரும் மாற வேண்டாம்" - ராதாகிருஷ்ணன் அட்வைஸ்!!

 

தமிழகத்தில் கொரோனா என்பது அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 20ஆயிரத்தை கடந்துள்ளது.  மற்றுமொரு பக்கம் ஒமிக்ரான் பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்த நிலையில்,  தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைத் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.  பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்,  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.

அதேசமயம் கொரோனா  நடைமுறைகளை கடைபிடிக்காத வர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் வருகிறது.  அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து ரூபாய் 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தனர்.  இந்த சூழலில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து  500 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "கொரோனா தொற்றின் எண்ணிக்கை தானாக குறையாது; மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே குறையும்.  அபராதம் வசூலிப்பது எங்களின் சாதனை இல்லை, வேதனையாக உள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். மருத்துவரின் அறிகுறியுடன் மட்டுமே மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும்; கூகுள் மருத்துவர்களாக யாரும் மாற வேண்டாம்" என்றார்.