×

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு என்ன காரணம்? இந்திய விமானப்படை அறிக்கை

 

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்ததற்கு பருவநிலை மாற்றமே காரணம் என இந்திய விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8 ம் தேதி ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.  இந்த விபத்து தொடர்பாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஏர்மார்ஷல் மான வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில் விபத்துக்குறித்து முப்படை நிபுணர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்திய விமானப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ஹெலிகாப்டர் விபத்துக்கு இயந்திர கோளாறோ கவனக்குறைவோ காரணமில்லை. தொழில்நுட்ப கோளாறால் விபத்து நிகழவில்லை. ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். எதிர்பாராத விதமாக உருவான மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததே விபத்துக்கு காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.