"1000 முறைகூட விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்வேன்"- நடிகை ராஷ்மிகா
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான தனது பிணைப்பு குறித்து சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விவகாரங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகை ராஷ்மிகா மந்தன்னா 8 பக்கங்கள் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடனான காதல் மற்றும் பேட்டி குறித்து எழுந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ராஷ்மிகா, "நான் மன அழுத்தத்தில் இருந்தபோது அவர் மட்டுமே என் கூட நின்றார். 1000 முறைகூட விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்வேன். எங்கள் காதல் குறித்து பலரும் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கே உள்ளது. விஜய் தேவரகொண்டா எனது கடினமான காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைப் பற்றி விமர்சிப்பதை ஏற்றுக்கொள்வேன். ஆனால், என் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் விமர்சிப்பது பெண்ணியம் அல்ல; அது BULLYING. எங்கள் காதலைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். எல்லா நேரங்களிலும் நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம்.
உங்களை மிகவும் அழகாக நேசிக்கும் ஒருவரைக் கண்டுபிடியுங்கள்; திருமணம் முடிந்த பிறகும் கூட, அவரிடம், “நாம் திருமணம் செய்துகொள்வோமா? என்று மீண்டும் கேட்கத் தோன்றும் அளவுக்கு அவர் உங்கள் மீது காதல் கொண்டிருக்க வேண்டும். நான் அவரையே ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன். நூறு முறை என்பது ஒன்றுமே இல்லை.ஆம், நான் என் கணவர் மீது தீராத காதல் கொண்டிருக்கிறேன். இதில் என்ன தவறு? நான் திருமணம் செய்துகொள்ளும் ஆண் மீது காதல் கொள்ளவில்லை என்றால், பிறகு நான் ஏன் அவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.