ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன் - கமல்ஹாசன் பதிவு..!!
மநீம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேசத்தின் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்-மந்திரி வி.டி. சதீஷன்;
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன், வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை;
சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ், ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் வானதி சீனிவாசன் & வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள்;
கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் மம்மூட்டி, சிரஞ்சீவி, மோகன்லால், பிரபாஸ், ராகவா லாரன்ஸ், சித்தார்த், விஜய் சேதுபதி, சேரன், அஸ்வத் மாரிமுத்து, ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, பி.சி. ஶ்ரீராம், ரவி. கே. சந்திரன், ஐசரி கணேஷ், தேவிஶ்ரீபிரசாத், ராதிகா, குஷ்பூ, சிம்ரன், அன்பறிவ் சகோதரர்கள், நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள்;
என் பாசத்துக்குரிய அக்காள் நளினி, பிரியத்துக்குரிய சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள்;
உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன். என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.