×

“லெஜன்ட் சரவணனின் உதவியை என்றும் மறக்கமாட்டேன்”-  பாவா லட்சுமணன் உருக்கம்

 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் பாவா லட்சுமணன் நிலையறிந்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் சார்பில் ரூபாய் 2 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது.

பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் மாயி படத்தில் வாமா மின்னல் என்ற காட்சியின் முகம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் . வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வந்த இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். சர்க்கரை நோயின் தாக்கத்தின் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரின் கால் கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.  கடந்த சில மாதங்களாகவே வருமானமின்றி மருத்துவ செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்த இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நடிகர் பாவா லட்சுமணன் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்தார்.  இதனை அறிந்த அமைச்சர் ராஜ்மோகன் அவரை சந்தித்து தனது எம்.எல்.ஏ குடியிருப்பை அவருக்கு வழங்கினார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் பாவா லட்சுமணன் நிலையறிந்து சமீபத்தில் லெஜண்ட் சரவணன் சார்பில் ரூபாய் 2 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டது. தற்போது கட்டில், மெத்தை, பீரோ, வாஷிங் மிஷின், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் பாவா லட்சுமணனுக்கு லெஜண்ட் சரவணா சார்பில் வழங்கப்பட்டுள்ளது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் இலவசமாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பாவா லட்சுமணன், "லெஜன்ட் சரவணனின் உதவியை என்றும் மறக்கமாட்டேன்" என உருக்கமாக கூறினார்.