தமிழ்நாட்டு மக்களுக்காக அந்த அவமானத்தையும் தாங்குவேன்.. முதலமைச்சர் விஜய்..!
Aug 7, 2026, 10:28 IST
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜயின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அவர் கூறுகையில், “கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எடுத்தது நான் தான். ஏதேனும் தீர்வு கிடைக்காதா என்ற எண்ணத்தில்தான் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் அவமானம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க நான் தயாராக இருக்கிறேன்” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தை தாங்க தயாராகவுள்ளேன். பெங்களூரு சென்று பேசலாம் என கேட்டது நான் தான். நேரில் பேசும்போது அவமானம் நடந்தால் என்ன ஆகும் என கேட்டனர். மக்களுக்காக அவமானங்களை தாங்க தயார் என சொன்னேன்" பெங்களூரு செல்ல திட்டமிட்டது குறித்து விஜய் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.