சிவாஜி கணேசனுடன் உங்களை ஒப்பிடுவதை பார்த்து எனக்கே கோபம் வந்தது!– மேடையிலேயே வெளுத்து வாங்கிய இயக்குநர் சேரன்!
இயக்குநரும் நடிகருமான சேரன் தொகுத்து வழங்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய திவாகர், தான் வெளியிடும் வீடியோக்கள் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வருவதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.
திவாகரின் பேச்சைக் கேட்ட சேரன், அவரை அருகில் அழைத்து அறிவுரை வழங்கினார். அப்போது, “மற்றவர்களிடம் நீங்கள் நிரூபிக்க வேண்டியது, உங்களிடம் உண்மையிலேயே திறமை இருக்கிறது என்பதை மட்டும்தான். உங்கள் பேச்சு, வளர்ச்சியை விட அதிகமாக இருப்பதாக சிலர் விமர்சிக்கின்றனர். உங்களை நடிகர் சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டுப் பேசுவதைப் பார்த்து எனக்கே கோபம் வந்தது. முதலில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறினார்.
மேலும், திவாகரிடம் ‘கர்ணன்’ படத்தில் சிவாஜி கணேசன் நடித்தது போன்ற ஒரு நடிப்பை வெளிப்படுத்துமாறு சேரன் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பான காட்சிகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன. இதையடுத்து, சேரனின் அறிவுரைக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Director Cheran sir tensed.. Watermelon star ‘Diwakar’ 😶🧐 https://t.co/UtKGoNcAE8
— Vikki | #CinemaMeter🎬 (@CinemaMeterOff) November 12, 2026
Director Cheran sir tensed.. Watermelon star ‘Diwakar’ 😶🧐 https://t.co/UtKGoNcAE8
— Vikki | #CinemaMeter🎬 (@CinemaMeterOff) November 12, 2026