என் அம்மா மேல சத்தியம் பன்றேன்...நான் காசு வாங்கல - நாஞ்சில் விஜயன் வீடியோ வெளியிட்டு விளக்கம்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன். பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது
இந்நிலையில் பிரபல டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, நாஞ்சில் விஜயன் தனக்கு நீண்டகால நண்பர். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது தங்கையின் திருமண செலவிற்காக 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தருவதாகவும் கூறி தன்னிடம் பணம் வாங்கினார், அந்த தொகையை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேரடியாக வழங்கினேன். பின்னர் மூன்று மாதங்கள் கடந்தும் பணத்தை திருப்பித் தராமல் பல்வேறு காரணங்களை கூறி காலதாமதப்படுத்தி வந்தார். கொரோனா காலகட்டத்திற்கு பிறகும் பலமுறை கேட்டபோதும் பணத்தை திரும்ப வழங்கவில்லை என தெரிவித்தார்.
கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் மீண்டும் பணத்தை கேட்டபோது, 2026 மே 22-ம் தேதி மதுரையில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரு எக்ஸ்போ நடப்பதாகவும், அங்கு வந்து என்னை சந்திக்குமாறு நாஞ்சில் விஜயன் கூறினார். நான் நேரில் சென்றபோது, பணத்தை வழங்குவதற்கு பதிலாக என்னை அவமதிக்கும் வகையில் பேசியதுடன், அங்கு இருந்த சிலர் என்னை மிரட்டி தாக்கியதாகவும், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும் சூர்யா தேவி தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
விஜே வைஷு என்பவர் நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக நாஞ்சில் விஜயன் மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, விஜே வைஷுவை ஆப் செய்ய தன்னிடம் ஐடியா கேட்டு தன்னை அழைத்ததாகவும் சூர்யா தேவி குறிப்பிட்டுள்ளார்.
நாஞ்சில் விஜயன், தன்னுடன் பேசிய வாட்ஸ் அப் சேட் ஆதாரங்களையும் சூர்யா தேவி சமர்பித்துள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது புகாரை பெற்றுள்ளதாகவும், அது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்த இருப்பதாகவும் சூர்யா தேவி தெரிவித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க தன்னை கஞ்சா வியாபாரி என சொன்னதற்காக இன்று மீண்டும் நாஞ்சில் விஜயன் புகார் தெரிவித்த திருநங்கை வைஷூ, “நாஞ்சில் விஜயன் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதுபோல, சூர்யா தேவியிடமும் பணம் வாங்கி ஏமாற்றியிருப்பார். தயவு செய்து முதல்வர் விஜயும், கமிஷனர் ஆபிஸ் அதிகாரிகளும் சேர்ந்து என்னுடைய பணத்தை வாங்கி கொடுக்க வேண்டும். இந்தமுறை நாஞ்சில் விஜயன் மீதான புகாரை நான் வாபஸ் வாங்க மாட்டேன். போனமுறை புகார் அளித்தபோது அவர் மீது காதல் இருந்தது. அதனால் புகாரை திரும்ப பெற்றேன். என்னை கஞ்சா வியாபாரி எனக் கூறியதற்காக நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாஞ்சில் விஜயன் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. 16 வருஷம் அவர் கூட நான் பழகி இருக்கேன்.. 7 வருஷம் அவர் கூட குடும்பம் நடத்தி இருக்கேன்.. அவரை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. மீடியா முன்னாடி நல்லவன் மாதிரி நடிப்பான்.. ஒரு திருநங்கையா சினிமாவில் 15 வருஷமா கஷ்டப்பட்டு வளர்ந்து வந்துட்டு இருக்கேன்.. என்னை எப்படி அவர் கஞ்சா வியாபாரினு சொல்லலாம்..? எந்தெந்த இடங்களுக்கெல்லாம் நீ வாய்ப்பு கேட்டுப்போறீயோ, அங்கே வாசலில் கூட உன்னை நுழைய விடமாட்டேன் என பிளாக் மெயில் பண்றான். என் வீட்டுக்கு வந்து உன்னை நாசப்படுத்திடுவேனு மிரட்டுறான். இதெல்லாம் ஒரு ஆம்பளைக்கு அழகா? என்னுடைய பெயரை நாஞ்சில் விஜயன் பயன்படுத்தக்கூடாது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த 2 பேர் புகார் அளித்த நிலையில், நாஞ்சில் விஜயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சத்தியமாக என் குழந்தை, என் அம்மா மேல சத்தியமா சொல்றேன் நான் பணம் வாங்கல... இதோ அவர் வெளியிட்ட வீடியோ...