☰
×

"செஞ்சி சிறுமியை பார்த்தேன்"- பெண் சமையலர் பரபரப்பு 

 

செஞ்சி சிறுமியை நாமக்கல்லில் பார்த்ததாகக் கூறிய பெண் சமையலரிடம் சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. இவருடைய மனைவி பவானி. இந்த தம்பதியினரின் 2-வது மகள் ஹேமாவதி(வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளாள். மறுநாள் அதிகாலை 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது ஹேமாவதியை காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், சிறுமியை கண்டுபிடிக்க பல இடங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செஞ்சியில் மாயமான சிறுமி ஹேமலதாவை நாமக்கல்லில் பார்த்ததாக சத்துணவு அமைப்பாளர் பவானி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தமது மகளின் செல்போனில் சிறுமி புகைப்படத்தை பார்த்து போலீஸுக்கு தகவல் கொடுத்ததாகவும், சிபிசிஐடி போலீஸ் விசாரணையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.  35 வயது மதிக்கத்தக்க இருவர், 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் சிறுமி இருந்ததாகவும் அப்பெண் பேட்டியளித்துள்ளார்.