எங்கேயோ பார்த்த முகம்... மீண்டும் ரசிகர்களின் இதயங்களை வென்ற கனகா - ராமராஜன் சந்திப்பு!
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள்தான் கனகா. பாடகியாக வேண்டும் என்கிற கனவுடன் திரையுலகில் நுழைந்த இவரை, இளமையும் அழகும் திரைப்பட நடிகையாக மாற்றியது.
நடிகர் ராமராஜனின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர், கடைசியாக 2000ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘நரசிம்மம்’ படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்னர் நடிப்பதில் இருந்து விலகிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.திரையுலகில் இருந்து முழுமையாக விலகியதற்கு காதல் தோல்வி, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில், நடிகர் ராமராஜனுடன் நடிகை கனகா சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கரகாட்டக்காரன் பட ஜோடியின் போட்டோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்ட கரகாட்டக்காரன் ஜோடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.