×

எனக்கு ஹாரோஸ்கோப் தெரியும்... விஜய் திரும்ப நடிக்க வருவார்.. பிரபல நடிகை ஓபன் டாக்..!

 

தினேஷ் தீனா இயக்கியுள்ள ‘அனலி’ படம் ஜனவரி 2-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார். சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் கதையின் நாயகியாக சிந்தியா லூர்டே நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும்.இந்த படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடித்துள்ள சக்தி வாசு, சுமார் 15 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்திருந்தாலும், தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் தொடர்ந்து ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பேன். பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

அனலி ஜனவரி 2ஆம் தேதி வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் படத்தை தமிழகம் முழுக்க வெளியிடுகிறது. அடுத்த வாரமே ஜனநாயகன், பராசக்தி படங்கள் ரிலீஸ் ஆனாலும் என்னுடைய படமும் நிச்சயம் பொங்கல் சீசனிலும் தியேட்டர்களில் ஓடும்.

சினிமாவை விட்டு விலகப்போவதாக சொல்லும் விஜய்யுடன் நான் நடிப்பேன். விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவார். அதுவும் எனது தயாரிப்பில் உருவாகும் படத்தில் அவர் நடிப்பார். அது எப்படி நடக்கும் என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக நடக்கும்.”தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் மாதத்தில் விஜய் மீண்டும் நடிப்புக்கு திரும்புவார் என அவர் கூறியுள்ளார். “எனக்கு ஹாரோஸ்கோப் தெரியும். விஜய் நடிகராகவே தொடர்வார். என் தயாரிப்பில் அவருடன் இணைந்து நடிப்பேன். அதை நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/gQEZLVZDaf4?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/gQEZLVZDaf4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">