×

“சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு என் முழு ஆதரவு உண்டு”- ரஜினி பட நடிகர் பேட்டி!

முதல்வர் பதவி என்பது கடவுள் கொடுக்கும் வரம்; அது எல்லோருக்கும் அமைந்துவிடாது என்று நடிகர் சுமன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர். இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நிலையில் திரைத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் ஆனதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா நேரத்தில் முன்கள பணியாளர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றினர். சட்டமன்ற தேர்தலில்
 

முதல்வர் பதவி என்பது கடவுள் கொடுக்கும் வரம்; அது எல்லோருக்கும் அமைந்துவிடாது என்று நடிகர் சுமன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர். இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நிலையில் திரைத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் ஆனதால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா நேரத்தில் முன்கள பணியாளர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றினர். சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவு முழுமையாக அதிமுகவிற்கு உண்டு. அதிமுகவில் சேர்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் மற்றொரு முதல்வரை தேர்வு செய்ய வேண்டாம். தமிழகம் பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்களை அண்டை மாநிலங்கள் காப்பி அடைத்துள்ளன. அதை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக்க வேண்டும். முதல்வர் பதவி என்பது கடவுள் கொடுக்கும் வரம்; அது எல்லோருக்கும் அமைந்துவிடாது”என்றார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும், அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.