×

அப்படி நான் சொல்லவே இல்லை - பல்டி அடித்த பிரேமலதா விஜயகாந்த்..!! 

 

சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை வைத்துக் கொண்டே, ஸ்டாலின் மீது ஒரு குற்றச்சாட்டு தான் வைக்க முடியும். எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை. இதைத் தவிர எதிர்க்கட்சிகளால் இந்த ஆட்சியில் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது என்று பிரேமலதா பேசினார். இது திமுகவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேமலதாவுக்கு திமுகவின் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் திமுக அரசுக்கு எதிராக தவறாக எதுவும் பேசவில்லை என பிரேமலதா கூறியுள்ளார். தான் அவ்வாறு பேசவில்லை என்றும், பெண்களின் பாதுகாப்பை ஸ்டாலின் உறுதி செய்வார் என்றுதான் கூறியதாகவும் பேசியுள்ளார். அத்துடன் தனது பேச்சை திரித்து வெளியிட்டு விட்டனர் என பல்டி அடித்துள்ளார்.