×

கடும் பிரச்சினைகளை நான் சந்திக்கவில்லை..இதற்கு ஒரே காரணம்.. மீண்டு வந்த நாராயணன் திருப்பதி அனுபவங்கள்

பல கோடி பேரை தொற்றி கொண்ட ‘கொரோனா’, கடந்த வாரம் என்னையும் தொற்றி கொண்டது. கடந்த 06/09/2021 அன்று ஞாயிறு இரவு கடும் காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். மறுநாள் காலை வரை காய்ச்சல் நீடித்த காரணத்தால், உடனடியாக சென்னை பொது மருத்துவமனைதலைமை மருத்துவரை தொடர்பு கொண்டேன். ‘தாமதப்படுத்தாமால் உடன் வருக’ என்றார். சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களின் வழக்கமான கனிவான மற்றும் இன்முகத்தோடு கூடிய
 

பல கோடி பேரை தொற்றி கொண்ட ‘கொரோனா’, கடந்த வாரம் என்னையும் தொற்றி கொண்டது. கடந்த 06/09/2021 அன்று ஞாயிறு இரவு கடும் காய்ச்சல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. உடனடியாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். மறுநாள் காலை வரை காய்ச்சல் நீடித்த காரணத்தால், உடனடியாக சென்னை பொது மருத்துவமனைதலைமை மருத்துவரை தொடர்பு கொண்டேன். ‘தாமதப்படுத்தாமால் உடன் வருக’ என்றார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களின் வழக்கமான கனிவான மற்றும் இன்முகத்தோடு கூடிய பரிசோதனைகள். அன்று மாலையே கொரோனா தொற்று உறுதி என்றார் மருத்துவர் என்று சொல்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி .

வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள சொல்லி அறிவுறுத்தப்பட்டதன் பேரில் கடந்த பத்து நாட்களாக தனிமைப்படுத்திக்கொண்டேன். முதல் மூன்று நாட்கள் காய்ச்சல் மற்றும் குளிர் இருந்தது. பிறகு பிரச்சினை எதுவும் இல்லை. மருத்துவர் அறிவுறுத்தலின் பேரில் இன்று மீண்டும் பொது மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா என்னை விட்டு விலகி விட்டது என்று உறுதி செய்து கொண்டேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

பல கோடி மக்கள் பல இடர்பாடுகளை எதிர் கொண்ட போதிலும், ஓரிரு நாட்கள் உடல் அயர்ச்சி இருந்த போதிலும், கடும் பிரச்சினைகளை நான் சந்திக்கவில்லை. இதற்கு ஒரே காரணம் இரு தடுப்பூசிகளையம் உரிய நேரத்தில் நான் செலுத்தி கொண்டது தான்.

உரிய நேரத்தில் எனக்கு சிகிச்சை அளித்த பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அவர்கள், மருத்துவர் பவித்ரா அவர்கள் மற்றும் என் குடும்ப மருத்துவர் டி எஸ் கண்ணன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உடல் சோர்வு இருந்த போதிலும் மனம் உற்சாகமாக இருந்ததால், தூங்கிய நேரம் போக மற்ற நேரங்களில் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தி கொண்டிருந்தேன். கடந்த இரு நாட்களாக ஒரு சில ஆங்கில தொலைக்காட்சிகளில் நேரலையில் நீட் குறித்து விவாதங்களில் இணைய வழியாக கலந்து கொண்டேன். சில கட்சி இணைய கூட்டங்களில் கலந்து கொண்டேன்.

கொரோனா தொற்றிலிருந்து நான் அதிக சிரமமில்லாமல் விடுபட மிக முக்கிய காரணம் தடுப்பூசி செலுத்தி கொண்டது. மேலும், தாமதப்படுத்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றது. அதோடு பதட்டப்படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. என் உடல்நலம் குறித்து அவ்வப்போது கவலையோடு விசாரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்னும் ஓரிரு தினங்களில் உடல் சோர்வும் நீங்கி மீண்டும் என் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன்.

தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள், தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார் நாராயணன் திருப்பதி.